Advertisment

காரும், டேங்கர் லாரியும் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்

tirupur dharapuram car tanker lorry incident

காரும், டேங்கர் லாரியும் மோதிகொண்ட விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு என்ற இடத்தில் தாராபுரம் - பழனி செல்லும் சாலையில் காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்த 4 பேர் உயிரிழந்தனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

கோவையில் இருந்து தாராபுரம் வழியாக பழனி நோக்கி சென்ற காரில் பயணித்த 3 பெண்கள் உட்பட் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் மோதிகொண்ட விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

car Dharapuram police tirupur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe