tiruppur district thirumoorthy dam water open cm palanisamy order

Advertisment

திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன் ஏரிப்பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி, உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் பூசாரி நாயக்கன் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம், பூசாரி நாயக்கன் ஏரிப்பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து 39.87 மி.கன அடிக்கு மிகாமல் 16/09/2020 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

Advertisment

இதனால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.