Advertisment

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

tiruppur district amaravati dam opening cm palanisamy order

Advertisment

அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 16 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களில் குறுவை சாகுபடிக்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 6048.00 மிக கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளில் குறுவை சாகுப்படிக்காக அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 2661.00 மிக கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 8709.00 மி.க. அடிக்கு மிகாமலும்20/09/2020 முதல் 02/02/2021 முடிய அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

Advertisment

இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 51,803 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

amaravati dam Tiruppur water level
இதையும் படியுங்கள்
Subscribe