tiruppur district amaravathi dam water released

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து பழைய வாய்க்கால் பாசனத்திற்கு இன்று (26/08/2020) முதல் நீர் திறக்கப்படுகிறது.

Advertisment

கல்லாப்புரம், ராமகுளம் பாசனத்திற்காக இன்று முதல் டிசம்பர் 24- ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படவுள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 2,384 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு 324 மி.க. அடி தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.