Advertisment

நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி படுகாயம்; சுட்டது யாரென போலீசார் விசாரணை...!

tiruppatur farmer incident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான வேலாயுதம். இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி இரவு திம்மாம்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் நுழைவாயிலில் நின்ற கொண்டு இருந்தவர் மீது மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

Advertisment

இதில் படுகாயமடைந்து மயங்கி வாசலில் விழுந்துள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்த குடும்பத்தார், அக்கம்பக்கத்தினர் இதைப்பார்த்து அதிர்ச்சியாகி உள்ளனர். உடனடியாக அவரை கொண்டு வந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரது இடது பாக்கெட்டில் செல்ஃபோன் வைத்திருந்த செல்போன் வெடித்து உள்ளது என நினைத்து இருந்த நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் பால்பரஸ் குண்டுகள் செல்ஃபோன்னில் இரண்டு ஓட்டைகளை போட்டது தெரியவந்தது. செல்ஃபோன் இல்லையென்றால் குண்டு இதயத்தில் பாய்ந்திருக்கும்.

Advertisment

வயிறு மற்றும் முகத் தாடை பகுதியில் 2 குண்டுகள் பாய்ந்தது தெரியவந்தது, அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவமனை தகவலின் பேரில் திம்மாம்பேட்டை போலீசார் சென்று சம்பவம் குறித்து விசாரித்து புகார் வாங்கி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விவசாயி மீது நாட்டு துப்பாகியால் சுட்ட மர்ம நபர்கள் யார், எதற்காக சுட்டார்கள், என்ன பிரச்சனை, சுட்டது என்ன துப்பாக்கி, அது எப்படி கிடைத்தது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. போலீஸார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த குள்ளையன் மற்றும் பிரகாசம் ஆகிய இருவரை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

TIRUPATTUR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe