Tiruppattur police station corona virus issue

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராம காவல் ஆய்வாளருக்கு கடந்த 23 ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பணியாற்றிய காவல் நிலையம் பூட்டபட்டது. அக்காவல்நிலையத்தில் பணியாற்றும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

அக்காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என அறிய பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மற்றவர்கள் யாருக்கும் இல்லை என்கிற தகவலே தெரியவந்தது.

அதனை தொடர்ந்து மே 1ந்தேதி கிராமிய காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டு குறைந்த அளவிலான மாற்று காவல்நிலைய அதிகாரிகளுடன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.