Skip to main content

'காலாவதியான பீர்' உயிருக்குக் கேடு என வேதனைப்படும் சமூக ஆர்வலர்கள்!

Published on 17/05/2020 | Edited on 18/05/2020

 

Tiruppattur Outdated liquour issue

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ளது 11,603 எண்ணுள்ள டாஸ்மாக் மதுபானக் கடை. இந்தக் கடையில் மே 18ஆம் தேதி ஒரு இளைஞர் பீர் கேட்டு வாங்கியுள்ளார். 120 ரூபாய் மதிப்புள்ள பீரை அரசின் விலையேற்றம் மற்றும் விற்பனையாளரின் கட்டாய டிப்ஸ் என சேர்த்து 150 ரூபாய் என விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
 


பிரிட்டிஷ் எம்பயர் என்கிற கம்பெனி தயாரிப்பான அந்த பீர் கடந்த 2019 டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி தயாரித்ததாகவும், ஏப்ரல் 24 ஆம் தேதி வரை தேதி மட்டுமே அதனைக் குடிக்க முடியும் என அதில் அச்சிடப்பட்டுள்ளது. அந்தப் பீர் காலாவதியாகி 22 நாட்களுக்குப் பின்பு அந்தப் பாட்டில் விற்கப்பட்டுள்ளது.

இந்தப் பீரை வாங்கிய அந்தப் படித்த இளைஞரான அந்தக் குடிமகன், காலாவதியான பீர் எனத்தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளார். இதுப்பற்றி கடையில் உள்ள விற்பனையாளரிடம் முறையிட முயல ராமாயண கதையில் அனுமார் வால் போல் வரிசை நீண்டுயிருந்ததால் திரும்பி வந்துள்ளார்.
 

 


இதுபற்றி டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, "அந்த பீரில் காலாவதி தேதி பார்த்ததால் தெரிந்துவிட்டது, இல்லையேல் தெரிந்திருக்காது. தற்போது விற்கப்படும் சரக்குகள் அனைத்துமே காலாவதியான சரக்குகள் தான். காரணம் இவைகள் ஜனவரி மாதம் கம்பெனிகளில் இருந்து டாஸ்மாக் குடோன்களுக்கு வந்தன. லாக்டவுனால் கடைகள் திறக்காததால் குடோன்களில் அப்படியே இருந்தன. கடைகள் திறந்திருந்தால் இவைகள் மார்ச் மாதமே காலியாகியிருக்கும். கடைகள் திறக்காததால் அப்படியே இருந்தன. தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசாங்கம் அனுமதி வாங்கி கடைகளைத் திறந்துள்ளது.

கடைக்கு வருபவர்கள் சரக்கு இல்லையென திரும்பி சென்றுவிடக்கூடாதுயென பழைய ஸ்டாக்குகளை விற்பனைக்கு அனுப்பிவிட்டார்கள். அதனைத் தான் விற்பனை செய்து கொண்டு இருக்கிறோம். 80 சதவிதம் சரக்குகள் காலாவதியானது என்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp


மது உடலுக்குக் கேடு என விளக்கமளிக்கும் அரசு, காலாவதியான மதுவை விற்பனை செய்கிறது. அதனை அறியாமலே வாங்கிக் குடிமகன்கள் குடிக்கிறார்கள். இது இன்னும் என்ன மாதிரியான கேடினை விளைவிக்கும் எனத் தெரியவில்லையே என வேதனைப்படுகிறார்கள் குடிக்கு எதிரானவர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்த கரடிக்கு ரேபிஸ் நோய்; வெளியான புதிய தகவல்

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

 latest report bear has rabies

 

தென்காசி மாவட்டத்தின் கடையம் அருகேயுள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்திற்குக் கடந்த 6ம் தேதியன்று பைக்கில் சென்ற மசாலா வியாபாரி வைகுண்டமணியை வனப்பகுதியிலிருந்து வந்த 8 வயது பெண் கரடி ஒன்று வழிமறித்துக் கடித்துக் குதறியது. இதைத் தடுக்கச் சென்ற பொதுமக்களையும் கரடி ஆவேசமாக விரட்டியதில் சைலப்பன், மற்றும் நாகேந்திரன் இருவரையும் கடித்துக் குதறியிருக்கிறது.

 

படுகாயமடைந்த மூன்று பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் கிசிச்சையிலிருக்கின்றனர். இதனிடையே வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் கரடியைப் பிடிப்பதற்காகத் தீவிரமாகத் தேடினர். ஆனால் கரடி ஆக்ரோஷமாக இருந்ததால் பிடிக்க முயற்சிக்கும் போது தாக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

இதையடுத்து பாதுகாப்பின் பொருட்டு கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர் அர்னால்ட் உள்ளிட்டோர் 15 அடி தொலைவிலிருந்து 2 மயக்க ஊசி செலுத்தி கரடியைப் பிடித்தனர். பின்னர் கரடி களக்காடு செங்கல்தேரி அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.

 

இதனிடையே பிடிபட்ட கரடி திடீரென்று இறந்தது. மயக்க மருத்து பாதிப்பினால் கரடி இறந்திருக்கலாம் என்றும் அல்லது நுரையீரல் பாதிப்பா என்று வனத்துறையினர் சந்தேகப்பட்டனர். பின்னர் இறந்த கரடியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பின்பு தலையணையில் எரிக்கப்பட்டது.

 

கரடியின் பிரேதப் பரிசோதனையின் தன்மை பற்றி நாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியாவிடம் கேட்டதற்கு, “கரடிக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு மற்றும் ரேபிஸ் எனப்படும் வெறி நோய் பாதிப்பும் இருந்திருக்கிறது. என்பது தெரிய வந்துள்ளது. கரடி வனத்தை விட்டு வெளியே வரும்போது நாய் கடித்திருக்கலாம். அதனால்தான் ஆக்ரோஷத்துடன் கரடி மனிதர்களைத் தாக்கியுள்ளது. இந்த விபரத்தை சிகிச்சையிலிருக்கிறவர்களின் மருத்துவமனை மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது” என்றார். இந்நிலையில் கரடிக்கு ரேபிஸ் வெறிநோய் பாதிப்பு விவகாரம் பரபரப்பாகியிருக்கிறது.

 

 

Next Story

மிரட்டலால் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்த பட்டியலின பெண்! 

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

The woman who resigned as vice president by intimidation!

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்டது வளையாம்பட்டு ஊராட்சி. இந்தக் கிராம ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. அதில் 8வது வார்டு உறுப்பினராக சோபியா நவீன் குமார் என்பவர் வெற்றிபெற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட சோபியா நவீன்குமார், 12 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

பதவிக்கு வந்து சில மாதங்களேயான நிலையில், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை ஆலங்காயம் வட்டார அலுவலரிடம் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோபியா கூறியதாவது, “என்னை ராஜினாமா செய்யச்சொல்லி தொடர்ந்து சிலர் வற்புறுத்தினர். அவர்களின் தொந்தரவு தாங்க முடியாததால் நான் ராஜினாமா செய்துவிட்டேன்” என்றார்.

 

தேர்தல் மூலம் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் 9வது வார்டு உறுப்பினரான கிருஷ்ணன் மற்றும் அவருக்கு நெருக்கமான ஊரின் முக்கிய பிரமுகரான சதாசிவம் இருவரும் சோபியாவை ராஜினாமா செய்ய வேண்டுமென நெருக்கடி தந்துள்ளனர். கடந்த டிசம்பர் 16ஆம் தேதி சோபியா வீட்டுக்கே வந்து எழுதி வைத்திருந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட வைத்துள்ளனர். பின்னர் அவரை அழைத்துவந்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசனிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க வைத்தனர். கடிதம் தந்துவிட்டு வெளியே வந்த சோபியா, தனக்குப் பிறர் நெருக்கடி தந்ததாலேயே ராஜினாமா செய்தேன் என நேரடியாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

 

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிக்க சாதியினர் அவருக்கு நெருக்கடி தந்து ராஜினாமா செய்யவைத்துள்ளார்கள் என தகவல் வெளியானது. இதனால் தற்போது அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாமல் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.