கள்ளச்சாராயம் குடித்த கூலி தொழிலாளி ரத்தவாந்தி... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பல்பநத்தம் பெரியான் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 51 வயதான பெருமாள். தினக்கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். குடிக்கு அடிமையாகி உள்ளார். அதே பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருபவர் சுரேஷ். அவரிடம் தினமும் அதிகாலையே சென்று சாராயம் குடிப்பது வழக்கம்.

Tiruppattur incident - illict liquor issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

விடியற்காலை 3 மணிக்கு கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளார். சாராயம் குடித்த ஒரு மணி நேரத்தில் வீட்டில் ரத்தவாந்தி எடுத்து மயக்க மடைந்து கீழே விழுந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியான குடும்பத்தினர் அழுது கத்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அழைத்து வந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காட்டினர். மருத்துவர்கள் உடனடியாக அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட ஆலாங்காயம் போலீசார் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

hospital liquor TIRUPPATUR Worker
இதையும் படியுங்கள்
Subscribe