திருப்பத்தூர் மாவட்டம், பெரியகண்ணாலப்பட்டி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் மருத்துவர் எனச்சொல்லிக்கொண்டு மருத்துவம் பார்த்து வருவதாகவும், ஊசிப்போடுவது, மருந்து மாத்திரை தருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர் அந்த தகவலை திருப்பத்தூர் வட்டாச்சியருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் நேரடியாக அக்கிராமத்துக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tiruppattur fake doctor.jpg)
அப்போது மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 48 வயதான ரவிச்சந்திரன் என்பவரை கையும் களவுமாக பிடித்தார். மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக்கில் ஊசி, மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில்கள் போன்றவை இருந்தன. அவரிடம் மருத்துவ சான்றிதழ் எதுவும்மில்லை என்பதை உறுதி செய்தனர்.
அதன்பின்னர் மாவட்ட, ஒன்றிய மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தந்தார் தாசில்தார். அவர்கள் வந்ததும் போலி மருத்துவரை மருத்துவ அலுவலர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர், மருத்துவ அலுவலர்கள் தந்த புகாரின் அடிப்படையில் கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us