Advertisment

ஆயுள் கைதியாக இருந்து வெளியில் வந்தவர் கொலை!

selvamani Tiruppanturai

கொலை வழக்கில் கைதாகி ஆயுள் கைதியாகச்சிறை தண்டனை அனுபவித்து நன்னடத்தை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுதலையானவர்மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

Advertisment

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பந்துறை கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜ். இவரது மகன் செல்வமணி (வயது 40). இவர் சில மாதங்களுக்கு முன்பு ஆயுள் கைதியாக இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாகி வந்தவர், இந்தநிலையில் ஞாயிறு மாலை 6 மணி அளவில் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

Advertisment

கொலை வழக்கில் கைதாகி ஆயுள் கைதியாகச் சிறை தண்டனை அனுபவித்து நன்னடத்தை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி வந்தவர், தற்பொழுது நாச்சியார்கோவில் அவரது சிறிய தந்தை கசாப்புக் கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

செல்வமணியை முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டரா, கொலை செய்த நபர்கள் யார், என்பது குறித்து நாச்சியார் கோயில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

incident Kumbakonam Police investigation
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe