Advertisment

அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் ஏற்படுத்திய பரபரப்பு... நொந்துப்போன மீட்பு படையினர்...

திருப்பத்தூர் மருத்துவமனையில் ஜனவரி 8ந் தேதி மாலை, ஒருவர் கட்டிடத்தின் மீது ஏறினார். திடீரென தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப்பார்த்த மருத்துவமைனைக்கு வந்த நோயாளிகளின் உறவினர்கள் பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

Tirupattur

அவர்கள் திருப்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறைக்கு தகவல் கூறினர். அவர்கள் வந்து அந்த இளைஞர் மீது கயிறு வலையை வீசி உயிருடன் மீட்டனர். அதன்பின்னர் அந்த இளைஞரை காவல்துறையினர் வசம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisment

இதை மீட்ட கொஞ்ச நேரத்தில், திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் கிராமத்தை சேர்ந்த அருண்பிரசாத் மகன் 19 வயதான திலக் என்ற இளைஞர், அதே ஊரில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துக்கொள்ள போவதாக மிரட்டியுள்ளான்.

ஊர் மக்கள் இது தொடர்பாக தகவல் தெரிவிக்க சம்பவயிடத்துக்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் நயமாக பேசி அந்த இளைஞரை டவர் மீதிருந்து கீழே இறக்கினர். அப்போது அவன் போதையில் இருப்பது தெரிய வந்தது. பின்பு அந்த இளைஞரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞன் மீது வழக்கு பதிவு செய்ய போலிஸார் முடிவு செய்து காவல் நிலையத்தில் உட்கார வைத்துள்ளனர்.

police Recovered TIRUPATTUR Youth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe