Advertisment

டாஸ்மாக் ஊழியரின் இரு சக்கர வாகனம் திருட்டு; வெளியான சிசிடிவி காட்சிகள்

tirupattur vaniyambadi settiyapanur tasmac shop salesman two wheeler cctv footage relaesed  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலையில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை விற்பனையாளர் சண்முகம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை டாஸ்மாக் கடை முன்பு நிறுத்தி கடையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மது பாட்டில் வாங்குவது போல் கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் அங்குள்ள இரு சக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடிச்சென்றுள்ளனர்.

Advertisment

டாஸ்மாக் கடை விற்பனையாளர் சண்முகம் வீட்டிற்குச் செல்வதற்காக தன் இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றபோது அங்கு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்து அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்தபோது 2 பேர் இருசக்கர வாகனத்தை எடுத்துச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

Advertisment

சி.சி.டி.வி காட்சிகளை வைத்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே இரு சக்கர வாகனம் திருடிச்செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vaniyambadi thirupathur police TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe