புதிய மாவட்டங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்... வேகம் எடுக்குமா அரசு?

திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் பகுதியில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கபட்டது. அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எங்கே அமைப்பது என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் புதுப்பேட்டை ரோடு சாலையில் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை டிசம்பர் 5 ந்தேதி வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

tirupattur new district pro officers not appointed peoples

வருவாய்த்துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து ஒவ்வொரு துறையின் மாவட்ட உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

மாவட்டத்தில் நடைபெறும் அரசுத்துறை தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு இன்னும் அதிகாரிகள், பணியாளர்களை நியமிக்கவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் மக்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதியதாக உருவாகியுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இது போன்ற சிக்கல்கள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Assistant Public Relations Officer not appointed peoples shock ranipet Tamilnadu tirupattur district
இதையும் படியுங்கள்
Subscribe