tirupattur jalagmbarai falls two passes away

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இது இப்பகுதியின் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி காலை, நீர்வீழ்ச்சிக்குச் சென்ற அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள மரம் ஒன்றில் ஒரு ஆண், ஒரு பெண் என இருவர் தூக்கிட்டு இறந்துள்ளனர். உடனடியாக இதுபற்றி குரிசலாப்பட்டு காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்குவந்த காவல்துறையினர் உடலை கீழே இறக்கி, அவர்கள் யார் என விசாரணை நடத்தினர். விசாரணையில் வாணியம்பாடி அடுத்த ஏரிவட்டம் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவரின் 35 வயது மகன் சக்திவேல் என்பதும், அந்தப்பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த சென்றாயன் என்பவரின் மனைவி 33 வயதான ரீட்டா என்பதும்தெரியவந்தது.

சக்திவேலுக்கும், ரீட்டாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த திருமணத்தை மீறிய உறவு விவகாரம் இரு குடும்பத்தாருக்கும் இடையே தெரியவந்துள்ளது. அதனால் இரு குடும்பத்துக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பிரிய மனம்மில்லாத இருவரும் நவம்பர் 3ஆம் தேதி இரவு இங்கு வந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Advertisment

உடலை திருப்பத்தூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த குரிசிலாப்பட்டு போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.