/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbil-mahesh-std_1.jpg)
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் ஒரு மணி நேரம் போராட்ட நடத்தித் திரும்பும் பணிக்குச் சென்று இருந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் மருத்துவ குழுவினர் ஒன்றிணைந்து அரசு மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உரியப் பாதுகாப்பு குறித்துத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் .
மேலும் அதே போல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நோயாளிகள் வார்டு, ஒருங்கிணைந்தஅவசர பேறுகால தாய் சேய் நல மையம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, கேமராக்கள் அடங்கிய அறை ஆகியவற்றை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கேமரா அறையில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மானிட்டர் சுத்தமாக குவாலிட்டி இல்லை. திருப்பத்தூர் அரசு மருத்துவமனை எத்தனை கேமராக்கள் உள்ளது என மருத்துவ அலுவலர் சிவகுமாரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இதுவரை 51 கேமராக்கள் உள்ளது. என மருத்துவ அலுவலர் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ams-art_11.jpg)
இதையடுத்து, உடனடியாக 75 இஞ்சி டிவி அளவிலான மானிட்டர் வேண்டும். 90 கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த பணியை நாளைக்குள் தொடங்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
இந்த ஆய்வின்போது மருத்துவம் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அலுவலர் சிவகுமார், மற்றும் மருத்துவர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)