/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/train-art.jpg)
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுவீத் என்பவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக அவரை வழி அனுப்பி வைக்க அவரது நண்பர்களான ஆசைத்தம்பி, கவுதம் உட்பட 4 பேர், திருப்பத்தூரில் இருந்து கடந்த 24 ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளனர். சென்னை வந்திருந்த இவர்கள் விமான நிலையம் செல்வதற்கு இரவு 7 மணியளவில் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் ரயிலானது மாம்பலம் - சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே சென்ற போது ரயிலில் பயணித்த ஆசைத்தம்பி எதிர்பாராத விதமாக திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன்ஆசைத்தம்பியைமீட்க ரயில் தண்டவாளத்தில் ஓடிய போது சென்னை கடற்கரை ரயில் நிலையம் நோக்கி வந்த ரயில் கௌதம் என்பவர் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசைத்தம்பி காயத்துடன் உயிர் தப்பிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிரிழந்த கவுதமின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரை காப்பாற்ற சென்ற போது ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்அதிர்ச்சியையும்சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)