Tirupattur district youth passes away

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியில் வசிப்பவர் சிவகுமார். 28 வயதான இந்த இளைஞர், வீட்டிற்கு வெளியே ஆகஸ்ட் 12 ஆம் தேதி படுத்துக்கொண்டு இருந்துள்ளார். ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை வீட்டை சுத்தம் செய்ய வாசலுக்கு வந்தபோது, திண்ணையில் படுத்திருந்த சிவக்குமார் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துயிருப்பதை தெரிந்து அலறியுள்ளனர்.

Advertisment

இதுக்குறித்து போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட்டதும் ஆம்பூர் கிராமிய போலீஸார் நேரடியாக வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணை நடத்தினர். இளைஞர் ஒருவர் வீட்டு வாசலில் வைத்து கொலை செய்யப்பட்ட தகவல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்திக்கு தெரியப்படுத்த அவர் நேரடியாக சம்பவயிடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

Advertisment

கொலை செய்தது யார்? முன்விரோதமா? பெண் தொடர்பா? குடும்ப பிரச்சனையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.