Advertisment

ஓடும் காரில் திடீர் தீ விபத்து... 8 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்!

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் குருபிரசாத். இவர் தனது உறவினர்களுடன் இனோவா காரில் காஞ்சிபுரம் சென்று, அங்கே அவரது மகள் திருமணத்திற்காக புடவைகளை வாங்கி கொண்டு, பின்பு மீண்டும் காரில் மாண்டியா நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது கார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே வந்த போது காரின் இன்ஜின் பகுதியில் புகை வருவதைக் கண்ட குருபிரசாத் காரை உடனடியாகநிறுத்தி இன்ஜினை திறந்து பார்த்த போது அதில் மளமளவென தீ பிடித்துஎரிந்து கொண்டிருந்தது.

Advertisment

TIRUPATTUR DISTRICT VANIYAMBADI TOLL PLAZA CAR INCIDENT

இதனால் அதிர்ச்சியடைந்த குருபிரசாத் கூச்சலிட்டார். அப்போது உறவினர்கள் அவசர அவசரமாக துணிகளை எடுத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கினர். பின்னர் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. கார் எரிவதை பார்த்த சுங்கச்சாவடி ஊழியர்கள் விரைந்து வந்து காரின் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

Advertisment

இந்த விபத்தில் குருபிரசாத் உடன் பயணித்த அவரது உறவினர்கள் 7 பெண்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CAR INCIDENT Toll Plaza vaniyambadi tirupattur district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe