Skip to main content

விளையாடியவர்களை விரட்டியடித்த ஆர்.டி.ஓ.! நடந்து சென்று விழிப்புணர்வு!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டத்தில் கோட்டாச்சியர் அலுவலகம் உள்ளது. வாணியம்பாடி கோட்டாச்சியராக இருப்பவர் காயத்ரி. இவர் ஜீன் 23ந் தேதி காலை வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் நகரத்துக்குள் ஜாப்ரபாத், சலாமாபாத், பாஷீராபாத் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் திடீரென ஆய்வில் ஈடுப்பட்டார்.


வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் குழுக்களாக வீதி வீதியாக நடந்து சென்று சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தேவையின்றி  வெளியில் சுற்றும் நபர்களை எச்சரித்தார். மேலும் கரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் முகக்கவசம் அணியாமல் இருந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தார். அவர் சென்ற பகுதியில் கூட்டமாகவும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களை காவல்துறையினரை வைத்து விரட்டியடித்தார்.


இன்னொரு முறை இப்படி கூட்டமாக இருந்தாலோ, விளையாடினாலோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என உத்தரவிட்டார். கோட்டாச்சியரின் இந்த திடீர் நடவடிக்கையால் வாணியம்பாடி நகர மக்கள் அதிர்ச்சியாகினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மின்கம்பம் மீது கார் மோதி விபத்து; 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Accident involving a car hitting a power pole; 6 college students were injured

வாணியம்பாடியில் மின்கம்பம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் பயின்று வரும் கல்லூரி மாணவர்கள் 6 பேர்  கல்லூரி முடிந்து காரில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில்  பயணம் செய்த ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியைச் சேர்ந்த நவ்மான், பெரியாங்குப்பம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நியாமத்துல்லா, கிஷோர், முஜம்மில், வாசிப், புர்கான்  உள்ளிட்ட  மாணவர்கள்  படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் ஆம்பூர் கிராமிய போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் நவ்மான் (19)உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கல்லூரி முடிந்து காரில் வீடு திரும்பியபோது விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.