திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு கிராமத்தில் சகாதேவன் கொட்டாய் என்கிற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன். இவரது குடும்பம் ஆடுகளை வளர்த்து வருகிறது. ஆடுகளை அடைத்து வைக்க வீட்டுக்கு அருகில் ஆட்டு கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

tirupattur district python youngters

இந்நிலையில் நவம்பர் 23 ஆம் தேதி இரவு சுமார் 25 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகைகள் அடைக்கப்பட்டு இருக்கும் கொட்டகை அருகே வந்துள்ளதை அறிந்த ராமகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Advertisment

Advertisment

இதனையடுத்து அந்த பகுதி இளைஞர்கள் அந்த 25 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பல கட்ட முயற்சிக்கு பின் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். இது குறித்து திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு அருகிலுள்ள ஜவ்வாதுமலை காப்பு காட்டில் விட்டனர்.