Advertisment

கத்தி முனையில் கவுன்சிலர் கணவர் கடத்தல்- மாவட்ட எஸ்.பி.யிடம் புகார்!

TIRUPATTUR DISTRICT POLICE INVESTIGATION

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தின் 14- வது வார்டு கவுன்சிலாக இருப்பவர் பாமிதாபானு. இவரது கணவர் சையத் ஆசிப் ஆலங்காயம் ஒன்றியம் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அக்டோபர் 20- ஆம் தேதி கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அப்போதே ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்துக்கு வெளியே கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுப்பதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரமுகர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறை தடியடி நடத்தி இருதரப்பையும் விலக்கி அனுப்பி வைத்தனர்.

Advertisment

TIRUPATTUR DISTRICT POLICE INVESTIGATION

கவுன்சிலர் பாமிதாபானுவின் கணவர் சையத் ஆசிப், கிருஷ்ணகிரியில் இருந்து வாணியம்பாடிக்கு காரில் வந்துக் கொண்டுயிருந்தபோது தி.மு.க.வைச் சேர்ந்த பேரணாம்பட்டு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சத்தியதிருநாவுக்கரசு, ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் உட்பட சிலர் எங்கள் நண்பர் சையத் ஆசிப்பை மிரட்டி காரில் இருந்து இறக்கி கத்தியைவைத்து மிரட்டி கடத்திச் சென்றனர். அந்த கும்பலிடமிருந்து எங்கள் நண்பரை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குப்புகார் தந்துள்ளார் இர்ஷாத் அகமது.

Advertisment

தி.மு.க. நிர்வாகிகள் மீது தரப்பட்டுள்ள கடத்தல் புகார் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TIRUPATTUR Police investigation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe