tirupattur district children incident

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ஏரியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெருமாள், ஐந்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் அஜித்துடன் ஆகஸ்ட் 18- ஆம் தேதி காலை ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். பெருமாள் கரையில் அமர்ந்து குளித்துக் கொண்டு இருந்துள்ளார். அஜித் ஏரி தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். சிறிது நேரத்தில் ஏரியில் மய்யப்பகுதிக்கு சென்ற அஜீத் கரைக்கு வரமுடியாமல் தத்தளித்துள்ளார்.

அவன் கதற, பெருமாள் தண்ணீருக்குள் ஓடிச்சென்று மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் தந்தையின் கண்முன்னே ஏரியில் உள்ள நீரில் மூழ்கியுள்ளான் சிறுவன் அஜித்.தந்தை பெருமாள் அஜித்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். மருத்துவர்கள் அங்கு பரிசோதனை செய்தபோது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாற்றம்பள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தினர், பின்பு வாணியம்பாடி மருத்துவனையில் உள்ள குழந்தையின் தந்தை மற்றும் வேறு சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.