Advertisment

கோயிலுக்குள் இருந்த சிசிடிவி கேமரா உடைப்பு... உண்டியலில் பணம் கொள்ளை!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியில் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை நவம்பர் 22- ஆம் தேதி இரவு திருடர்கள், உண்டியலை உடைத்து உள்ளிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Advertisment

tirupattur district cctv camera damaged and  money thief police

கொள்ளைக்கு முன்பாக தாம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக, கோயில் நுழைவாயில், வளாகத்தில் வைத்திருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தியுள்ளனர். இன்று கோயிலுக்கு வந்த கோயில் பூசாரி இதனைப்பார்த்துவிட்டு தகவல் சொல்லியுள்ளார். கோயில் நிர்வாகிகள் வந்து பார்த்துவிட்டு உமராபாத் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

issues police temple thief tirupattur district
இதையும் படியுங்கள்
Subscribe