Skip to main content

முதல்வரை வரவேற்று பேனர், கொடி வைக்க தடை- திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் அறிவிப்பு!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் நிர்வாக பணிகளை முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று தொடங்கி வைத்து வருகிறார். 


அதன் தொடர்ச்சியாக நவம்பர் 28- ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வருகிறார். இந்த வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் ஆலோசனை நடத்தினார்.

TIRUPATTUR AND RANIPET NEW DISTRICTS INAUGURATION FLEX BAN COLLECTOR ORDER


ஆலோசனையில், முதல்வரை வரவேற்க, அதிமுக உட்பட எந்த ஒரு அமைப்புக்கும் பேனர் வைக்க, பிளாஸ்டிக் கொடி, தோரணம் கட்ட, சாலையோரம் இரும்பு கம்பியில் கொடி கட்ட அனுமதி கேட்டால் அனுமதி தரக்கூடாது. அதேபோல் அப்படி கட்டியிருந்தால் உடனடியாக அதனை அகற்ற வேண்டும். மேலும் நலத்திட்ட உதவி பெறும் பட்டியலில் உள்ள பயனாளிகள் அதிகாரிகள் அழைத்து வந்து, அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவற்றை தந்து சிறப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'உங்களுடைய கனவு பலிக்காது; உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்' - இபிஎஸ் பேச்சு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'Your dream will not come true; We will not be afraid of rolling intimidation'-EPS speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு இன்றைக்கு  அவருக்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுத்து தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய அனுப்பி இருக்கிறார்கள். இது என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா? தமிழ்நாடு.

ஏன் இங்கு இருப்பவர்களில் யாரும் வரக்கூடாதா? மேடையில் இருப்பவர்கள் வரக்கூடாதா? இது ஜனநாயக நாடு மு.க.ஸ்டாலின் அவர்களே. உங்களுடைய கனவு பலிக்காது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். வாரிசு அரசியல் இங்கு கிடையாது. இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் மக்கள். போகும் பக்கம் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை சாடி பேசுகிறார். என்னைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார். அரசியலுக்கு வந்து விட்டால் எல்லா விமர்சனங்களும் தாங்கக்கூடிய சக்தி எங்களுடைய தலைவர்கள் எங்களுக்கு வழங்கிய விட்டு சென்றுள்ளார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எங்கள் தொண்டன் கூட பயப்பட மாட்டான். உங்களுடைய உருட்டல், மிரட்டல், அவதூறு பேச்சுக்கெல்லாம் அடிபணியும் கட்சி அதிமுக அல்ல''என்றார்.