Skip to main content

திருப்பதி - புதுச்சேரி ரயிலை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் முயற்சி! காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
train



திருப்பதி - புதுச்சேரி பயணிகள் ரயில் காஞ்சிபுரம் வந்தபோது அதனை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்வதாக கூறியதால் பரபரப்பு நிலவியது. 
 

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் விரிவாக்கத்திற்காக மும்தாஜ் பேகம் என்பவரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிய இழப்பீடை அளிக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் இழப்பீடு தொகை அளிக்காதால் திருப்பதி - புதுச்சேரி பயணிகள் ரயிலை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி நீதிமன்ற ஊழியர்கள் ரயிலை ஜப்தி செய்ய காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் காந்திருந்தனர். 

 

train


 

ரயில் வந்ததும் ரயிலை ஜப்தி செய்வதாக நீதிமன்ற ஊழியர்கள் ரயில் ஓட்டுநர்களிடம் தெரிவித்தனர். உயர் அதிகாரிகளிட பேசுங்கள், எங்ளுக்கு இதைப்பற்றில்லாம் தெரியாது என்று ரயில் ஓட்டுநர்கள் கூறியுள்ளனர். இருதரப்பும் மாறி மாறி பேசியதால் சுமார் 20 நிமிடங்கள் ரயில் அங்கு நின்றது. ரயிலில் இருந்த பயணிகள் நேரம் ஆகிறது என்று கூறியதையடுத்து, பின்னர் நீதிமன்ற உத்தரவெல்லாம் எங்களுக்கு தெரியாது என கூறி ரயில் ஓட்டுநர்கள் ரயிலை ஓட்டிச் சென்றனர். இதனால் நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரயிலை ஜப்தி செய்ய முயன்றதால் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி; காவலை நீட்டித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Senthilbalaji who appeared in person; The court extended the custody

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையொட்டி செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி கடந்த முறை காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 33ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுகொள்ள சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (22.04.2024) செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 34 ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.