Skip to main content

திருப்பதி தேவஸ்தானம்- சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகம் சார்பில் தேவஸ்தான குழுவில் சிறப்பு அழைப்பாளராக சேகர் ரெட்டியை மீண்டும் நியமித்தது ஆந்திர அரசு. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் சேகர் ரெட்டி தேவஸ்தான பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Tirupati Devasthanam   Sekhar Reddy re-appointed



சேகர் ரெட்டி மீதான இரண்டாவது, மூன்றாவது எப்.ஐ.ஆர் ரத்தான நிலையில், முதல் எப்.ஐ.ஆர் மட்டுமே நிலுவையில் உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரசில் முக்கிய பதவி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Anand Srinivasan has an important position in the Congress

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இதனையொட்டி அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டிருந்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ். ராஜேஷ் குமார் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்புகளைக் காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்புத்துறை தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்த பதவியில் கோபண்ணா செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக கோபண்ணா, ஸ்வர்ண சேதுராமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களாக டி. செல்வம், கே. தணிகாசலம், அருள் பெத்தையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

ஏழுமலையானை தரிசனம் செய்த முகேஷ் அம்பானி... நன்கொடை அளித்தது எவ்வளவு?

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

How much did Mukesh Ambani who visited the Seven Mountain Elephant donate?

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத் திட்டத்திற்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 1 கோடியே 11 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். 

 

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு, அவருக்கு ரங்கநாயபுரம் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கினர். பின்னர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதான திட்டத்திற்காக முகேஷ் அம்பானி 1 கோடியே 11 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். 

 

அதைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.