Advertisment

யார் முதலில்... போட்டி போட்ட அமைச்சரும் சபாநாயகரும்!!

tirunelveli welcome ceromy minister nehru speaker appavu 

திருநெல்வேலியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் யார் முதலில் பொன்னாடை போர்த்துவது என அமைச்சரும் சபாநாயகரும் போட்டி போட்டுக் கொண்ட சம்பவம் அங்கிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்பதற்காக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு திருநெல்வேலி சென்றிருந்தார். அப்போதுதமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு திமுக தொண்டர்களுடன் வரவேற்றார். இந்நிலையில் அமைச்சர் நேரு காரில் இருந்து இறங்கியவுடன் பொன்னாடை போர்த்துவதற்குசபாநாயகர் முயற்சித்தார். உடனே அமைச்சர் நேரு சபாநாயகர் அப்பாவுவின் கையை பிடித்துபொன்னாடையை சபாநாயகருக்கு போட முயன்றார். ஆனால் சபாநாயகர் அதனை ஏற்காமல் அமைச்சருக்கு பொன்னாடை போட முயன்றார். இறுதியில் அமைச்சர் நேரு சபாநாயகர் அப்பாவுக்குபொன்னாடையை போர்த்தினார். அதனைத்தொடர்ந்து சபாநாயகர் அமைச்சருக்கு பொன்னாடையை போர்த்தினார். இந்த செயலானது அங்கு இருந்த திமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

Tirunelveli
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe