
திருநெல்வேலியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் யார் முதலில் பொன்னாடை போர்த்துவது என அமைச்சரும் சபாநாயகரும் போட்டி போட்டுக் கொண்ட சம்பவம் அங்கிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்பதற்காக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு திருநெல்வேலி சென்றிருந்தார். அப்போது தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு திமுக தொண்டர்களுடன் வரவேற்றார். இந்நிலையில் அமைச்சர் நேரு காரில் இருந்து இறங்கியவுடன் பொன்னாடை போர்த்துவதற்கு சபாநாயகர் முயற்சித்தார். உடனே அமைச்சர் நேரு சபாநாயகர் அப்பாவுவின் கையை பிடித்து பொன்னாடையை சபாநாயகருக்கு போட முயன்றார். ஆனால் சபாநாயகர் அதனை ஏற்காமல் அமைச்சருக்கு பொன்னாடை போட முயன்றார். இறுதியில் அமைச்சர் நேரு சபாநாயகர் அப்பாவுக்கு பொன்னாடையை போர்த்தினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அமைச்சருக்கு பொன்னாடையை போர்த்தினார். இந்த செயலானது அங்கு இருந்த திமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.