நெல்லை முன்னாள் மேயர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசந்திரன், வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் தேதி மதியம் அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 3 பேர் கொலை தொடர்பாக கார்த்திகேயன் என்பவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த உமா மகேஸ்வரி வீட்டிற்கு கார்த்திகேயனை அழைத்துச் சென்ற போலீசார், அங்கு வைத்து கார்த்திகேயனை விசாரித்தது. விசாரணை முடிந்து திரும்பவும் கார்த்திகேயனை போலீசார் அழைத்துச் சென்றனர்.