கரோனா தொற்றுபரவலைகட்டுப்படுத்தும் வகையில்,ஊரடங்கு கடந்த மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. பெரும்பாலானமக்கள்வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். பொழுது போக்கில்லாததால் வாய்ப்பைபயன்படுத்திக் கொண்ட சிறுவர்கள், விளைவு தெரியாமல் வெளிபகுதிகளில் சுற்றி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111_289.jpg)
நெல்லை மாவட்டம் களக்காடு சமீபம் உள்ள நெடுவிளைக் கிராமத்தின் விவசாய தம்பதியர், வைகுண்டராஜா - சுயம்புக்கனி இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும்ஒரு மகள் ஆகியோர்உள்ளனர். மூத்த மகன் ஆனந்த் ராபின்சன்(13) மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படிப்பவர். நேற்று சிலருடன் அருகிலுள்ள காட்டுப் பொத்தையின் மீது புதர்களிலிருந்த தேன்கூட்டில் தேன் எடுக்கச் சென்றார். பொத்தையில் ஏறிய ஆனந்த் ராபின்சனை தேனீக்கள் கொட்டியது இதனால் தடுமாறி நிலைகுலைந்தவர் பொத்தையின் அடிவாரத்திலுள்ள பாறையின் மீது விழுந்தார். இதில் கை, கால், தலையில் அடிப்பட்டுபலத்த காயமடைந்த மாணவன் ராபின்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த களக்காடு போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகநாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாணவன் பலியானது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.தேன் ஆசை, விலை மதிப்பில்லா உயிரைக் காவு வாங்கியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)