Advertisment

மேலப்பாளையத்தில் கலெக்டர் மீட்டிங் - பொதுமக்களின் 10 கோரிக்கைகள்...

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மூலமாக அங்குள்ள பலருக்கும் பரவியிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையிலும் மேலாப்பாளையத்திற்கு செல்லும் அத்தனை வழிகளும் மூடப்பட்டன.

Advertisment

இந்த நிலையில் மேலப்பாளையத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை அதிகாரிகள், மாநகராட்சி, சுகாதார துறை அதிகாரிக உடன்,ஜமாத்துல் உலமா சபை தலைவர் பி. ஏ. காஜா மொய்னுதீன் அவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அமைப்புகள், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 02.04.2020 அன்று நடைபெற்றது.

அதில் மேலப்பாளையத்தின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி மற்றும் அனைத்து அடிப்படை தேவைகள் குறித்தும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கலெக்டருடன் விவாதித்தனர். பின்னர் மேலப்பாளையம் மக்கள் சார்பில் கீழ் கண்ட கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது.

dd

Advertisment

1. மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தி வெளி வட்டாரத்தில் பரப்பப்படும் வதந்திகளை தடுத்திட வேண்டும்.

2. நெருக்கடி மற்றும் கெடுபிடிகளை தளர்த்திட வேண்டும்.

3. மேலப்பாளையம் முழுவதும் மூடப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

4. கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட நோயாளிகளை பாளை, ஜங்சன், டவுண் உள்ளிட்ட தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்க அனுமதி மறுக்கப்படுவதை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வேதனையோடு எடுத்து சொல்லப்பட்டது. (அதற்கு அவர் தனியார் மருத்துவர்களிடம் பேசுவதாக தெரிவித்தார். மேலும் ஹைகிரண்ட் மருத்துவமனையில் அரசு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அங்கேயும் நீங்கள் சேர்க்கலாம் என தெரிவித்தார்.)

5. மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் மற்றும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தர வலியுறுத்தப்பட்டது. செய்து தருவதாக உறுதி தெரிவித்தார்.

6. இரண்டு நாட்களாக குப்பைகளை அகற்ற துப்பரவு பணியாளர்கள் வரவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. (தேங்கி உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் மேலும் தெருக்கள், ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்).

dd

7. வெளியிலிருந்து வரக்கூடிய அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை சாமான்கள், பால், கேஸ் சிலிண்டர், நியுஸ் பேப்பர் போன்றவைகளை தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். (அனைத்தும் எந்த தடையுமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள்).

8. டவுண் போன்ற பகுதிகளுக்கு சென்று வியாபாரிகள் பொருட்கள் வாங்கிவர தடை இல்லாமல் பார்த்து கொள்ள கேட்டு கொள்ளப்பட்டது. (வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதாக தெரிவித்தார்).

9. மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சில இடங்களில் இருக்கும் கம்பு(தடை)களை மட்டும் அகற்றிட கேட்டுக்கொள்ளபட்டது.

http://onelink.to/nknapp

10. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் சரிவர செய்து தர கேட்டு கொள்ளப்பட்டது.

இது போல் பல கோரிக்கைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்து தர கேட்டுக்கொள்ளபட்டது.

public collector Melapalayam thirunelveli corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe