Advertisment

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; மூவர் போக்சோவில் கைது 

tirunelveli melapalayam government aided school incident 

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீம் (வயது 47). இவர் அப்பள்ளியில் படிக்கும் சில மாணவிகளை அழைத்துச் சென்று தனக்கு உடல் வலிப்பதாக மாணவிகளிடம் கூறி கைகளை அமுக்கி விடுமாறுகூறி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகத்தொந்தரவுசெய்துள்ளார்.

மேலும் கடந்த 4 ஆம் தேதி 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தமாணவிகள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாணவிகளின்பெற்றோர் மற்றும் முஸ்லிம்அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை மகளிர் போலீசார் பள்ளிக்கு வந்து பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீம், இதற்கு உடந்தையாக செயல்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் காதர் அம்மாள் பீவி மற்றும் தாளாளரின்மனைவி ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

police Tirunelveli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe