Advertisment

முடக்கப்பட்ட மேலப்பாளையம்.... தற்போதைய நிலவரம்...

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மூலமாக அங்குள்ள பலருக்கும் பரவியிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையிலும் மேலாப்பாளையத்திற்குச் செல்லும் அத்தனை வழிகளும் மூடப்பட்டன.

Advertisment

melapalayam

மேலப்பாளையம்

மேலப்பாளையத்தில் உள்ள யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும், டூவீலர்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்ததுடன், ஒவ்வொரு தெருமுனையிலும் மளிகை-காய்கறி விற்பனை செய்யப்படும் என்றும்,ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் நடந்து வந்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

Advertisment

melapalayam

மேலப்பாளையம்

இதனால் அங்கு தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நிலையில் இன்று மேலப்பாளையத்தில் அரசு அறிவித்துள்ள ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.தெருக்களில் ஒரு மினி லாரியில் பொருட்களை வைத்து விநியோகம் செய்தனர் ரேஷன் கடை ஊழியர்கள்.இந்தப் பொருட்களை வாங்க மக்கள் நெருக்கமாக நின்றிருந்தனர்.இது பார்ப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

chennai

சென்னை அயனாவரத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க இடைவெளிவிட்டு நிற்கும் மக்கள்.

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் அரசு அறிவுறுத்தியப்படி கடைகளுக்கு முன்னால் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு நிற்க வட்டம் போடப்பட்டிருந்தது.

ஆனால் மேலப்பாளையத்தில் ரேஷன் பொருட்களை வாங்கும் மக்களுக்கு இடைவெளி விட்டு நிற்க வட்டம் போடவில்லை. பொதுமக்கள் சிலரும் இடைவெளிவிட்டு நிற்கவில்லை. பொருட்களை வாங்க வந்த மக்கள் பெரும்பாலும் முக கவசமும் அணியவில்லை என்பது பார்ப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

corona virus Melapalayam Tirunelveli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe