Advertisment

மேலப்பாளையம்! மூன்று மணி நேரம் மட்டுமே அவகாசம்... 

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மூலமாக அங்குள்ள பலருக்கும் பரவியிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையிலும் மேலாப்பாளையத்திற்கு செல்லும் அத்தனை வழிகளும் மூடப்பட்டன.

Advertisment

Melapalayam -

மேலப்பாளையத்தில் உள்ள யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும், டூவீலர்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்ததுடன், ஒவ்வொரு தெருமுனையிலும் மளிகை-காய்கறி விற்பனை செய்யப்படும் என்றும், ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் நடந்து வந்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

Advertisment

ஊரில் உள்ள முக்கிஸ்தர்களை அங்கு உள்ள பள்ளிக்கூடத்திற்கு அழைத்து அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊர் முக்கிய தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களின் உறவினர்களை ஊருக்கு வெளியே கல்லூரி ஒன்றில் தங்க வைத்துள்ளனர் என்று இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது தெரிய வந்தது.

Melapalayam -

மேலும் மேலப்பாளையத்தில் அன்றாடத் தேவைகளுக்கான முக்கிய அத்தியாவசியப் பொருள்களை காலை 6 மணி முதல் 9 மணிக்குள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பொதுமக்கள் தங்களது குடுத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்க தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் இங்கு மட்டும் 3 மணி நேரம் மட்டும் ஒதுக்குவதா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

corona virus Melapalayam Tirunelveli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe