Advertisment

ஆற்றில் மூழ்கி மாணவிகள் உட்பட 3 பேர் பலி!

Tirunelveli Karaiyar Sorimuthu Ayyanar Temple Damiraparani River incident

கோயிலுக்கு வழிபடச் சென்ற 3 பேர் ஆற்றில் மூழ்கிப் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அங்கு முருகன் குடும்பத்தினர்தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தனர்.

Advertisment

அப்போது ஆற்றில் குளித்த மேனகா (வயது 18), சோலை ஈஸ்வரி (வயது 15), சங்கரேஸ்வரன் (வயது 40), மாரிஸ்வரன் ஆகிய 4 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதில் மேனகா, சோலை ஈஸ்வரி மற்றும் சங்கரேஸ்வரன் ஆகிய மூவரையும் சடலமாக மீட்டனர். மேலும் மாரீஸ்வரன் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

thamirabarani Tirunelveli temple river
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe