/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Tirumala_090615 (4).jpg)
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், பிரபல தொழிலதிபரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர்.எம்.யூ.கண்ணையா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகப் பிரசித்திபெற்ற திருப்பதியில் தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினர்களாகத்தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிப்பது வழக்கம். மேலும், இந்த உறுப்பினர் பொறுப்பு மிகவும் உயரிய பொறுப்பாகப் பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us