Advertisment

காதல்... திருமணம் நிச்சயம்... வரதட்சணை... தற்கொலைக்கு முயன்ற போலீஸ் காதல் ஜோடி

tt

திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருபவர் ஜெயதேவ். திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருபவர் செண்பகம். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவீட்டாரும் பேசி, வரும் 20-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே வரதட்சணை குறித்து இரு வீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் இவர்கள் இருவரும் மிகுந்த மன வேதனையில் இருந்தனர்.

Advertisment

வரதட்சணை பிரச்சனையில் திருமணம் நின்று விடுமோ என்கிற பயத்தில் ஜெயதேவ் விஷமருந்தி மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ஏற்கனவே ஒரு கிட்னி பாதிக்கப்பட்டிருந்த நிலையில் விஷமருந்தியதால் மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இதற்கிடையே பாதுகாப்பு பணிக்காக ராமநாதபுரம் சென்றிருந்த செண்பகம், இந்த தகவலை அறிந்து எலிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து சக காவலர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tiruchirappalli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe