திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி கனகராஜ். இவரது மனைவி சாந்தமீனா (40). இவர்களுக்கு லோகநாதன் (15) என்ற மகன், கோகிலா(13), லலிதா(11) என இரு மகள்கள் உள்ளனர். தனது கணவர் சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

Advertisment

tttt

கடந்த வாரம் திங்கட்கிழமை சாந்தமீனா வேலைக்குச் சென்றிருந்த நிலையில், சாந்த மீனாவின் மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாகக்கூறி வீட்டில் இருந்த உறவினர்கள் மருதூர் மருத்துமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கோகிலா, லலிதா ஆகியோரை சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுமிகள் இருவரும் பல் துலக்க, எலி மருந்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியதாக மருத்துவரிடம் கூறியுள்ளனர்.

முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து சிறுமிகள் இருவரும் வெள்ளிக்கிழமை ஒன்றன் பின் ஒன்றாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி மூலம் மணப்பாறை காவல்நிலையத்தில் சாந்தமீனா சரணடைந்தார்.

Advertisment

http://onelink.to/nknapp

இது குறித்து போலிசிடம் கொடுத்த வாக்குமூலத்தில், திருச்சிக்கும் மணப்பாறைக்கும் இடையே உள்ள சமூத்திரம் என்கிற கிராமத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் தனது கணவனும் கொடூர நோயினால் இறந்து விட தனது கணவரின் சகோதர்கள் 3 பேர் அடுத்தது வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவனின் சகோதரர்களில் ஒருவரான ரவிசந்திரன் என்பர் ஆட்டோ டிரைவர். அவர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது காணாமல் போனது. அதனை எனது மகள்கள்தான் எடுத்தனர்.

இதில் கடந்த வாரத்தில் தன் மகள்கள் பணம் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதிர்ச்சியடைந்த நான் அவற்றால் தனது குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் 6- ஆவது, 8- ஆவது படிக்கும் மகள்களுக்கு ஞாயிறு மாலை குளிர்பானத்தில் எலி மருந்தைக் கலந்து கொடுத்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், கொலை வழக்குப்பதிவு செய்து சாந்தமீனாவைக் கைது செய்து இந்தக் கொலைக்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.