/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/corona 45_18.jpg)
திருச்சியில் இன்று ஒரு நாளில்மட்டும் 4 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.77 பேருக்கு இன்று கரோனாதொற்று உறுதியாகி உள்ளது. இப்படி நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் மரணங்களும் அதிகரித்துள்ளன. திருச்சியில் கரோனா தொற்றினால் ஏற்படும்மரணத்தை பொதுமக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்..
திருச்சி மாநகர அதிமுக தில்லைநகர் பகுதி செயலாளராக இருப்பவர் முஸ்தா. இவருடைய மனைவி ரகமத்துனிஷா கரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில மாத்திரைகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். வீட்டு சென்ற அவர் மாத்திரைகளை சாப்பிட்டு வந்து இருக்கிறார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டும் காய்ச்சல் குறையாமல் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சு திணறல் அதிகமானவும் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அறிகுறியுடன் வந்தபோதே அவருக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவர் பிழைத்திப்பார் என்று அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
38 வயதான திருமதி சுமதி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார், அவருக்கு கடந்த வியாழக்கிழமையன்று எந்தவித அறிகுறியும் இல்லாத மிக லேசான காய்ச்சலுடன்மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவரை அவரது கணவர் ரயில்வே மருத்துவமனையில் இதன் சம்பந்தமாக எந்த விதமான வசதிகளும் முன்னேற்பாடுகளும் தற்போது வரை ஏற்பாடு செய்யாத காரணத்தினால்சுமதியின் கணவர் வெங்கடேஷ் திருச்சியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றுள்ளார்.
திருச்சி தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குறைபாடு உள்ள காரணத்தினால் எந்த மருத்துவமனையில் அவரை அனுமதிக்கவில்லை. அதன் பிறகு சுமதியை திருச்சி அரசு பொது மருத்துவமனையில் வெள்ளி அன்று சேர்த்துள்ளார். அன்று அவருக்கு எந்தவிதமான மருத்துவ உதவியும் அங்குள்ள மருத்துவர்களால் உடனடியாக செய்யப்படவில்லை.
சுமதிக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்கு வெண்டிலட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அது பாதியிலே கழன்று இருப்பது தெரிந்து அதை மருத்துவரிடம் சொல்லியிருக்கிறார். அதை சரி செய்வதற்குள்ளாகவே எந்த முன்னேற்றம் எதுவும் கணவர் வெங்கடேஷ் கண் முன்னே மனைவியை பறிகொடுத்து இருக்கிறார்கள்.
இந்தஅலட்சியமரணம் குறித்து திருச்சி கோட்ட DREU-CITU இன்று பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன்பு கண்டனப் போராட்டம்நடத்தினார்கள்.
இது குறித்து திருச்சி கோட்ட DREU-CITU தெரிவிப்பது:
ரயில்வே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த ஒரு ஊழியருக்கு இந்த நிலைமை என்றால் commercial, Traffic, Engineering, DRM office ஆகியவற்றில்வேலை பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்ற இதுவரை எந்தவிதமான முன்னேற்பாடோ,வசதியோரயில்வே மருத்துவமனையில் செய்யவில்லை என்பதை சுமதி இறப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். திருச்சி கோட்டத்தின் அலட்சிய போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு தொழிலாளி உயிரின்மதிப்பு விலைமதிப்பற்றது என்பதை நிர்வாகம் புரிந்துகொண்டு மிக விரைவில் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துப் போராட்டம் நடத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/download_94.jpg)
இதேபோன்று திருச்சியில் மேலாண்மை இயக்குநராக இருப்பவர் சோம்புரா. இவருக்கு வயது 54. இவர் சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் கரோனோ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். ஆனால் முடிவு வந்து சேரவில்லை. எனினும் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு 3 நாட்கள் கழித்து மீண்டும் வழக்கம்போல் வேலைக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் திடீர் என அரசு மருத்துமனையில இருந்து சோம்புராவுக்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு கரோனோ நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுஎன்று சொல்லி அவரை அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். பின்பு அவரை பரிசோதனை செய்து விட்டு நோய் குணமடைந்து விட்டது என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.
எப்படி அதற்குள்ளாக குணமாகியிருப்பார், இதேபோன்று குளித்தலை அருகே உள்ள மேட்டுபட்டியை சேர்ந்தவர் எம்.கே.பிச்சை. இவர் திடீர் என காய்ச்சல் அடித்ததால் உடனே வீட்டில் தனிமைப்படுத்தி இருந்திருக்கிறார்கள். இதற்கு இடையில் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் திருச்சி அரசு மருத்துனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அனுமதித்த அடுத்த நாள் கரோனா பரிசோதனை செய்திருக்கிறார். பரிசோதனை செய்த அடுத்த நாள் காலையில் திடீர் என சிகிச்சை பலன் இன்றி இறந்திருக்கிறார். உடனே அவர்கள் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்து திருச்சி ஓயாமாரி சுடுகாட்டில் உடலை எரிக்க வைத்தனர். ஆனால் அவருக்கு கரோனோ தொற்று உறுதியா, இல்லை என்பதை கடைசி வரை சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். இதனால் ஊர்மக்கள் எம்.கே.பிச்சைக்கு கரோனா தொற்று உள்ளதா,இல்லையாஎன்பதே தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)