Advertisment

வெளிநாடுகளில் இருந்து திரும்பியோரைக் கண்ணீர் விட வைக்கும் கரோனா சிகிச்சை!

tiruchirappalli

Advertisment

கரோனா தொற்று ஒவ்வொரு நாளும் உச்சத்தைத்தொட்டு வரும் சூழலில் சொந்த நாட்டுக்கும், வீட்டுக்கும் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான சேவைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. முற்றிலுமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள், வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப முடியாமல் அகதிகள் போன்று தவித்து வந்தனர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றுலா விசாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், விமானப் போக்குவரத்தும் முடங்கியுள்ளன.

தாயகம் திரும்புவர்களின் கோரிக்கைகள் ஏற்று திரும்ப வருவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. திருச்சியில் அலையன்ஸ் ஏர், இண்டிகோ, ஏர் ஏசியா, மலிண்டோ ஏர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உட்பட பல விமான சேவைகள் உள்ளன.

Advertisment

இந்த விமான சேவையானது ஹைதராபாத், சிங்கப்பூர், சென்னை, பெங்களூர், அபுதாபி, மதுரை, ஷார்ஜா, துபாய் உட்பட பல்வேறு உள்நாட்டுச் சேவைக்கும் வெளிநாட்டுச் சேவைக்கும் உள்ளது. கரோனா காலங்களில் துபாயிலிருந்து வெளிநாட்டு தமிழர்கள் வருகின்றனர். அப்படி வருகின்றவர்கள் பெரும்பாலும் திருச்சி விமான நிலையத்திலே வந்திறங்கினார்கள். அதில் திருச்சிக்கு வந்தவர்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.

இதுகுறித்து வெளிநாட்டிலிருந்து திருச்சிக்கு வந்த பயணிகளிடம் பேசுகையில், திருச்சி விமான நிலையத்தில் விமானம் இரவு 10 மணிக்கு தரையிறங்கியதில் இருந்து வழக்கமான சோதனைகள் மற்றும் நோய்த்தொற்று சோதனையையும் முடித்து காலை 4 மணிக்கு வெளியே வருகிறோம்.

வருகை தந்த எங்களை திருச்சியில் தனியார் தங்கும் விடுதியில் தங்க வைக்கின்றனர். தங்குவதற்குக் கட்டணத்தை பயணிர்களான நாங்கள்தான் கட்ட வேண்டியது உள்ளது.

தனியார் விடுதியில் ஒவ்வொரு அறையும் சாதாரணமாக 1,500 ரூபாய் கட்டணத்தில் இருந்து துவங்குகின்றது. உணவு விடுதியில் தங்கும் அறைகள் காலியாக உள்ள அறையில் தங்க வைக்கும் போது அந்தக் கட்டணத்திற்கு பயணிகள் தங்க வைக்கப்படுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து உள்நாட்டுக்கு வருபவர்கள் 21 நாட்கள் தனியார் தங்கும் விடுதியில் தங்க வைக்கின்றனர்.

அறை வாடகை மட்டுமே 1,500 என்றால் உணவு பிற தேவைகள் என்று ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டாயிரத்தில் இருந்து 2,500 ரூபாய் செலவாகின்றது அதேநேரத்தில் குடும்பமாக இருந்தால் ஒரு அறையில் தங்கி விடலாம்.

தனியாக பெண் பயணிகள் வருகை தந்து தங்கும் விடுதியில் தங்கினால் அவர்களின் நிலை சொல்லி மாளவில்லை. ஏனென்றால் தங்கும் விடுதியில் 21 நாட்களை எவ்வாறு கழிப்பது பொதுவாகத் தனிமைப்படுத்துகின்றோம் என்று 21 நாட்கள் சொல்கின்றார்கள். கரோனா பரிசோதனைக்கு எங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும் மூன்று நாட்களில் பரிசோதனை முடிவு தெரியப்படுத்துவது கிடையாது.

http://onelink.to/nknapp

சுமார் 15 நாட்கள் தனிமைப்படுத்திய பின்பு இருப்பிடத்திற்கு அனுப்புகிறார்கள். அதற்குப் பல்வேறு நபர்கள் சிபாரிசு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அப்படி என்றால் சாதாரண தங்கும் அறைக்கு 15 நாட்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. சொந்த நாட்டிற்கு வருகை தந்தும் தனிமைப் படுத்துகிறோம் எனப் பல ஆயிரம் ரூபாயும் லட்ச ரூபாயும் செலவிட நேருதால்வெளிநாட்டு இந்தியர்கள் கண்ணீர் விடுவது திருச்சி வாசிகளைக் கலங்கடித்து வருகிறது.

lodge corona testing corona airport Tiruchirappalli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe