Advertisment

வாழை, பணப்பயிர் பாதிப்பு... நஷ்ட ஈடு வழங்க திருநாவுக்கரசர் கோரிக்கை...

சூறாவளி காற்றால் வாழை மற்றும் பணப் பயிர் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிற விவசாயிகளுக்கு உடனடியாக தகுந்த நிவாரண நஷ்ட ஈட்டுத் தொகைகளை வழங்கிட வேண்டுமென திருச்சி எம்.பி.யான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Advertisment

su thirunavukkarasar

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் பகுதியில் 8.4.2020 அன்று திடீரென்று பலமாக தாக்கிய சூறாவளிக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையால் இப்பகுதியிலுள்ளவாழை பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகி பெரும் நஷ்டத்தை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழக அரசின் விவசாய துறை அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். உடனடியாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வாழை மற்றும் பணப் பயிர் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிற விவசாயிகளுக்கு உடனடியாக தகுந்த நிவாரண நஷ்ட ஈட்டுத் தொகைகளை வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisment

Srirangam trichy rain Farmers su thirunavukkarasar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe