Advertisment

சுவர் ஏறி குதித்து திருட முயற்சி... புரட்டி எடுத்த பொதுமக்கள்... சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு...

ddd

திருச்சி அல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் வசித்து வரும் நிலையில் அவருடைய வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் 2 வாலிபர்கள் திருடுவதற்காக முயன்று வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளனர்.

Advertisment

அதை அறிந்த வெங்கடேசன் சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் அரவிந்த் என்பவர் தப்பித்து செல்ல தீபு என்ற வாலிபர் சிக்கினார். இவர்களைக் குறித்து பொதுமக்கள் விசாரித்ததில் அவர்கள் இருவரும் திருவனந்தபுரம் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் தீபு கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களை மிரட்ட அவர்கள் தீபு வை சரமாறியாக தாக்கியுள்ளனர். தாக்கியதில் படுகாயம் அடைந்து தீபுவை பொதுமக்களே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisment

மேலும் தப்பி சென்ற அரவிந்தை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தீபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Police investigation arrested thieves Tiruchirappalli
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe