
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள திருநாளூர் தெற்கு கிராமத்தைச் சேர்எதவர் அன்புராஜ். சென்யில் ஒரு கேஸ் ஏஜன்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது தந்தையின் சொத்தை தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி கடந்த 2018 ம் ஆண்டு முதல் பல முறை மனு கொடுத்தும் பயனில்லை.
மாதம் ஒரு முறை சென்னையிலிருந்து செலவு செய்து கொண்டு அறந்தாங்கி வந்து சென்று செலவு செய்தவரை அவரது குடும்பத்தினர் பட்டா வாங்கிக் கொண்டு வா என்று சொன்னதால் விரக்தியடைந்தார். எத்தனை ஆண்டுகள் ஒரு பட்டாவுக்காக அலைவது என்று ஒரு முடிவுக்கு வந்தவர். கடந்த 31 ந் தேதி சமையல் கியாஸ் சிலிண்டர், வெல்டிங் குழாயுடன் அறந்தாங்கி தாலுகா அலுவகத்திற்கு சென்று கணினி மற்றும் ஆவண அறையின் ஜன்னல் ஓரமாக தீ பற்ற வைத்தார். அந்த தீ பரவுமும் முன்பு அவரை சிலர் பிடித்துக் கொண்டதால் ஆவணங்கள் தீயிலிருந்து தப்பியது. அதன் பிறகு வந்த போலிசார் அன்புராஜை கைது செய்து அலுவலகத்திற்கு தீ வைக்க முயன்றதாக சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால் அதன் பிறகும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. கண்ணீர் ஏழையான நான் நேர்மையாக பட்டா மாறுதல் கேட்டேன் கிடைக்கவில்லை. என் குடும்பத்தினரும் பட்டா வாங்கலன்னா தாலுகா அலுவலகத்திலேயே தூக்கு போட்டுக்கன்னு திட்டுறாங்க. ஒரு மாதம் வேலை செய்ற பணத்தில் அறந்தாங்கி வந்து போனேன். இன்னும் எத்தனை வருசம் தான் அலையுறது என்று கண்ணீரை கொட்டிக் கொண்டே காவல் நிலையம் சென்றார்.
அதன் பிறகும் அங்கு மனுவோடு வருவோரிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. ஆனால் அடுத்த சில நாட்களில் அன்புராஜ் போல வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தாலுகா அலுவலகத்திற்குள் செல்லும் பிரதான நுழைவாயிலை பூட்டிவிட்டார்கள். அந்த வளாகத்தில் தான் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம், நலிவுற்றோர் நலத்திட்ட அலுவலகம் உள்ளது. நுழைவாயில் பூட்டப்பட்டு சிறிய கதவு மட்டும் திறக்கப்பட்டிருப்பதால் அந்த அலுவலகத்திற்கு வரும் பலரும் அலுவலகம் திறக்கவில்லை என்று செல்வதும் நடக்கிறது. மேலும் அந்த அலுவலகங்களுக்கு வரும் வாகனங்கள் நிறுத்த தாராளமாக இடமிருந்தும் நுழைவாயில் பூட்டப்பட்டதால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு துரித நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பு சமூக ஆர்வலர்கள் மேலும் சில கேள்விகளை அறந்தாங்கி வட்டாட்சியருக்கு சமூக வலைதளங்கள் மூலம் எழுப்பியுள்ளனர்.
நீங்கள் பூட்டு போட்டு பூட்ட வேண்யது நுழைவாயிலை அல்ல.. அலுவலகத்தில் வாங்கும் லஞ்சலாவண்யங்களை, அலுவலகத்தை தீ வைக்கும் அளவுக்கு ஏழை தொழிலாளியை அலையவிட்டவர்களை, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு பொதுமக்களை விரட்டியடிக்கும் கேடுகெட்ட நிலையை.. தமிழகத்திலேயே இல்லாத அளவு அறந்தாங்கியில் நடக்கும் மணல் கொள்ளையை, அறக்கு துணை போகு அதிகாரிகளை.. வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் அப்படியே இருந்தாலும் ஏழைகளை விரட்டியடிக்கும் அலட்சியவாதிகளை.. இவற்றை தான் முதலில் பூட்டை போட்டு பூட்ட வேண்டும் பிரதான நுழைவாயிலை பூட்டி பயனில்லை என்று அந்த பதிவுகள் பரவுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)