/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1686.jpg)
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மழவரேனந்தல் கிராமத்திற்கு நேற்று மாலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து வந்தது. அப்போது அரசு பேருந்து பழுது ஏற்பட்டதால் மழவரேனந்தல் கிராமத்தில் பயணிகளை இறக்கிவிட்டு காலியாக திருப்புவனம் டிப்போவிற்கு புறப்பட்டுச் சென்றது. திருப்புவனம் பிரதான சாலையில் வரும்போது அரசு பேருந்தின் முன் பக்க சக்கரம் தனியாக கழண்டு ரோட்டில் உருண்டு ஒடி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. அரசு பேருந்து ஓட்டுனர் திறமையாக பேருந்தை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே இதுபோன்ற விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு பேருந்தில் இருந்து முன்பக்க டயர் கழன்று ஓடிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)