காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் வசித்து வந்த குருமூர்த்தி தனது காரில் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். புலிக்குகை என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது, காரின் வலது பக்கத்தில் டயர் வெடித்தது.
இதில், நிலை தடுமாறிய கார் சாலையோர கல்லில் மோதி, அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் ஓட்டிவந்த குருமூர்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அன்று சென்ற காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றிப் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.