திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

Advertisment

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மருத்துவமனையில் தனி வார்டில்அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisment

TIRCHY TO MALASIYA AIRASIA FLIGHTS CANCEL CORONAVIRUS

இந்த நிலையில் தினமும் திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் 2 ஏர் ஏஷியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. திருச்சி மற்றும் மலேசியா இடையே ஏப்ரல் 15-ஆம் தேதி வரை தினமும் ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படும் என ஏர் ஏஷியா நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தாக்கம், பயணிகள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.