திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள அதிமுக எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலாளர் சோமசுந்தரம் மளிகை கடையில் மார்ச் 2- ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டு் வீசி் விட்டுத் தப்பியோட்டினர்.

Advertisment

நாட்டு வெடிகுண்டு வீசியதில் கடையில் இருந்த சோமசுந்தரம் மனைவி புஷ்பா காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிசிச்சைபெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

TIRCHY INCIDENT LAWYER ARRESTED POLICE

இந்த நிலையில் திருப்பைஞ்ஞீலி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அரியநாதன் மற்றும் சுரேஷ் குமார், கண்ணன் ஆகியோரை கைது செய்த மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான வழக்கறிஞரின் செல்போனை ஆய்வு செய்ததில், வழக்கறிஞரோடு மண்ணச்சநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தொடர்ந்து செல்போனில்பேசியது தெரிய வந்தது. இருப்பினும் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment