Advertisment

டிப்பர் லாரி மோதி விபத்து; 6 பேர் பலியான சோகம்

Tipper truck incident 6 people lost their lives

சாலையை கடக்க முயன்ற போது டிப்பர் லாரி மோதி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மொத்தம்4 இரு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில்சாலையைக் கடக்க முயன்றபோது, அவர்கள் மீதுஅங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, சாலையைக் கடக்க முயன்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Chengalpattu hospital police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe