Advertisment

ஆட்டோக்கள் மீது மோதி மளிகைக் கடைக்குள் புகுந்த டிப்பர்; ஒருவர் உயிரிழப்பு

Tipper rams 3 autos into grocery store; One person was lose their live

மதுரையில் பயணிகளை ஏற்ற காத்திருந்த மூன்று ஆட்டோக்கள் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள செட்டியாபட்டி கிராமத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக சாலை ஓரத்தில் ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்தது. அப்பொழுது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து எம்சாண்ட் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மூன்று ஆட்டோக்கள் மீது மோதியது. மேலும் மளிகைக் கடை ஒன்றில் புகுந்து நின்றது.

Advertisment

இந்த விபத்தில் ஆட்டோவில் அமர்ந்திருந்த ஆட்டோ ஓட்டுநர் மணிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் ஏற காத்திருந்த ஆறு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் உசிலம்பட்டி தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டுள்ளனர். இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயத்துடன்மீட்கப்பட்டவர்கள் விவரம்; பள்ளி மாணவி சசிஹா, தவ ராஜா, மலைராமன், அறிவழகன், விஜயகுமார், மலைராஜா.

accident madurai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe