Advertisment

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலக எழுத்தர் கைது!  

Tindivanam registrar office   clerk arrested

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலக எழுத்தர் லஞ்ச புகாரில் கைது செய்யப்படு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

விழுப்புரம் அருகில் உள்ள அசூர் கிராமத்தைச் சேர்ந்தவர்யுவராஜ்(30). இவரது தாய்கலைமணிபெயருக்கு 2007ஆம் ஆண்டு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. இந்தபட்டாவைதிருத்தம் செய்வதற்காகயுவராஜ்,வட்டாட்சியர்அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், திருத்தம் செய்வதற்காகபதிவறையில்உள்ள கணக்கு புத்தகத்தை வாங்கி வருமாறுயுவராஜிடம்கூறியுள்ளனர். அந்தக் கணக்கு புத்தகத்தை எடுத்துக் கொடுப்பதற்குபதிவறைஎழுத்தரான சிவஞானவேலு(48),யுவராஜிடம்ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

Advertisment

யுவராஜ், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி.தேவநாதன்தலைமையிலானபோலீசாரிடம்புகார் அளித்துள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய 5000 ரூபாயை எழுத்தர் சிவஞான வேலிடம்யுவராஜ்கொடுத்துள்ளார். அந்த சமயம், வட்டாட்சியர் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறைபோலீசார், சிவஞானவேலுவைகையும்களவுமாகப்பிடித்தனர். மேலும் இது சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. இதையடுத்து சிவஞானவேலுவைவிழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திநீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

police thindivanam Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe